(மீரா)என் நித்திரையின் சுவை தந்தான் நல்சொப்பனத் திறையாண்டான் சித்தமெலாமென் பெயரினைப்போல் பக்தையெனை வர்ணித்தான் கனவுலகை நாடினேன் அதனுடைய நாதனே கண்ணா - மணிமகுடமயில்வண்ணா மணாளனே |
||
(பகவான்)உன் பாடலோர் இனிபானமே மதுபோதைபோல் கண்சொக்குமே பாமாலையும் என்மாமாயையும் பாரெங்குமே பறந்தோங்குமே என்னை காணாத வேளையில் நீ வீணாய் திரும்பியும் கண்ணே, இனிரசகனியமுதே கைவிடமாட்டேன் |
||
(மீரா)பார்தனே பயம்கொண்டுனை பிரார்த்தனைசெய்நேர்ந்ததே உன் வாக்கினை என் வார்த்தையே... |
||
(பகவான்)ஒரு வாகனம்போல் எனைத்தாங்குமே |
||
(சேர்ந்து)ஆசையும் குழலோசையும் சுருதிசேருமே |
||
(மீரா)கண்ணா - யதுகுலமுரளீதரா மனோகரா |
(பகவான்)கண்ணே, புதுமலர்முகமனமே பேரின்பமே |
|
(கூட்டம்)கண்ணா… மணிமகுடமயில்வண்ணா... கண்ணா… மணிமகுடமுகில்வண்ணா... |
||
(பகவான்)வனமாளும் சந்திரனும் மனமாளும் இந்திரனும் எனதென்று நம்புவார் |
||
(மீரா)உனதன்பை நாடினேன் |
||
(மீரா)இருள்சூழும் பாதையில் அருள் தேடும் கண்களின் கண்ணா - கமலஜனார்தனா புருஷோத்தமா |
(பகவான்)இருள்சூழும் பாதையில அருள் தேடும் கண்களின் கண்ணே, அறுசுவைநவரசமே உன்பாடலே |
|
(பகவான்)பாடு. குயிலே, உனக்காக பாடு |
||
(மீரா)கண்ணா, பரமாத்மகீத நாயகா கண்ணா |
||
(மீரா)கண்ணா |
(பகவான்)பாடு |
|
(மீரா)கண்ணா |
(சற்று முன் நுழைந்த ராணா)எனக்காக பாடு. |
|
(மீரா)கண்ணா |
||
(பகவான்)குயிலே, உனக்காக பாடு |
||
(மீரா)கண்ணா கண்ணா கண்ணா |
||
(ராணா)எனக்காக பாடு |
||
(மீரா)கண்ணா |